அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் கைது!

அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் கைது!
DELL
Published on

புதுதில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமாரை அம்மாநில காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மாலிவாலை, முதலமைச்சர் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லத்தில் பிபவ் குமார் தாக்கியதாக பிரச்னை எழுந்தது. சுவாதி மாலிவால் இதுகுறித்து புகார் எழுப்பியதை அடுத்து தேசிய மகளிர் ஆணையம் இதில் தலையிட்டு, பிபவ் குமாருக்கு விசாரணை அழைப்பாணை அனுப்பியது. ஆனால் அவர் அந்த அழைப்பாணைகளைப் பொருட்படுத்தவில்லை. 

இந்த நிலையில், நேற்று மாலையில் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில அமைச்சர் அதிசி, பா.ஜ.க.வின் திட்டமிட்ட சதி இது என்றும் முதலில் அவர்கள் கெஜ்ரிவாலைத்தான் இப்படி சிக்கவைக்க முயன்றனர்; நல்வாய்ப்பாக சுவாலி மாலிவால் சென்ற நேரத்தில் அவர் வீட்டில் இல்லை என்றும் உண்மையை விளக்க சிசிடிவி காட்சிகளே போதும் என்றும் கூறினார். 

பின்னர், முதலமைச்சர் கெஜ்ரிவாலின் வீட்டில் நடந்த நிகழ்வுகளை சிசிடிவி காட்சிகளாக வெளியிட்டனர். அதில் சுவாதி மாலிவால் கூறும்படியாக சம்பவம் ஏதும் நிகழவில்லை. 

உட்கட்சிக்கு உள்ளேயே இப்படியொரு பிரச்னை எழுந்திருப்பது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com