இந்தியா
நாடாளுமன்ற மக்களவைக்கான ஆறாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் முற்பகல் 11 மணிவரை 25.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தேசியத் தலைநகர்ப் பகுதியான தில்லியில் 21.69 சதவீதம், அரியானாவில் 22.09 சதவீதம், ஒடிசா மாநிலத்தில் 21.3 சதவீதம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 27.06 சதவீதம் என வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, மேற்குவங்க மாநிலத்தில் 38.88 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 23.11 சதவீதம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 27.8 சதவீதம், பீகாரில் 23.67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.