இந்தியா
நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுடன் அருணாச்சலப்பிரதேசத்தில் சட்டப்பேரவைக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் இன்று முடிவடைந்தது.
இதில், முதலமைச்சர் பெமா காண்டு உட்பட பா.ஜ.கவைச் சேர்ந்த 5 பேரை எதிர்த்து யாருமே போட்டியிடவில்லை. இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
ஐவரில் மற்ற மூன்று பேர், தற்போது ஆளும் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
தேச்சி ராட்டு என்பவர் மட்டும் புதுமுகம் ஆவார்.
முதலமைச்சர் பெமா காண்டுவின் முக்டோ தொகுதியுடன், சாகலி, டாலி, தாலிகா, ரோயிங் ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க.வினரை எதிர்த்து யாரும் மனுவே தாக்கல்செய்யவில்லை.