கண்முன்னே நடந்த நிலச்சரிவு- அதிர்ச்சி வீடியோ... 30 தமிழர்கள் மீட்பு!

30 persons from tamilnadu rescued in Uttarakhand landslide
உத்தராகண்ட் நிலச்சரிவு- 30 தமிழகப் பயணிகள் மீட்பு
Published on

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆன்மிகச் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 

கடந்த 1ஆம்தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 12 பெண்கள் உட்பட 30 பேர் வட இந்தியாவுக்கு தெய்வீகச் சுற்றுலா சென்றனர். நான்கு நாள்களுக்கு முன்னர், உத்தராகண்டில் உள்ள ஆதிகைலாஷ் எனும் இடத்துக்கு அவர்கள் சென்றபோது, தனக்பூர்-தவாகாட் நெடுஞ்சாலை பகுதியில் கண்முன்னே நிலச்சரிவு ஏற்பட்டதைக் கண்டனர். 

மேற்கொண்டு செல்ல வழியில்லாமல் திண்டாடியவர்கள் அங்குள்ள ஆசிரமம் ஒன்றில் அடைக்கலமாகி, சொந்த ஊருக்குத் தகவல் தெரிவித்தனர். 

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அங்குள்ள பித்தோரகர் மாவட்ட ஆட்சியருடன் பேசி, உதவிசெய்யக் கேட்டுக்கொண்டார். அதன்படி, தமிழகப் பயணிகளை இரண்டு குழுக்களாகச் சென்று தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர். அவர்கள் முதலில் தில்லிக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து தமிழகத்துக்குக் கூட்டிவரப்படுகின்றனர். 

இதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அங்கு சிக்கித்தவித்த பராசக்தி என்பவருடன் முதலமைச்சர் ஆறுதலாகப் பேசினார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com