இந்தியா
இஸ்ரேலில் இருந்து 235 இந்தியர்களுடன் இரண்டாவது மீட்பு விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தது.
இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் காரணமாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தின் மூலமாக அங்குள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, முதல் கட்டமாக இஸ்ரேலில் சிக்கித் தவித்த 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் நேற்று அதிகாலை டெல்லி வந்தது. இதில், 17 மாணவர்கள் உள்பட 21 தமிழர்களும் அடங்குவர்.
இதன் தொடர்ச்சியாக, 235 இந்தியர்களுடன் இரண்டாவது மீட்பு விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. மத்திய வெளியுறவுத் துறையின் இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், பயணிகளை விமான நிலையத்தில் வரவேற்றார். அங்கிருந்து பயணிகள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.