அரசு பேருந்தை கட்டியணைத்து... கண்ணீருடன் விடை பெற்ற ஓட்டுநர்!

அரசு பேருந்தை கட்டியணைத்து... கண்ணீருடன் விடை பெற்ற ஓட்டுநர்!
Published on

முப்பது ஆண்டுகளாக அரசு பேருந்தை ஒட்டிய ஒட்டுநர் ஒருவர், ஒய்வுபெறும் நாளில் பிரியமனமில்லாமல், பேருந்தை கட்டியணைத்து அழுத வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழக அரசு துரையில் பணியாற்றும் ஊழியர்கள் 60 வயதுடன் ஓய்வு பெறுவது வழக்கம். அந்தவகையில்,மதுரை திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் 30 ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றிய முத்துப்பாண்டி இன்றுடன் ஓய்வு பெற்றார். அதிலென்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? தான் முப்பது வருடமாக ஓட்டிய அரசுப் பேருந்தை பிரியமனமில்லாமல் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தி அழுதிருக்கிறார் முத்துப் பாண்டி. அவர் இயக்கிய 31-A என்ற பேருந்தானது திருப்பரங்குன்றம் வழியாக அனுப்பானடி மற்றும் மகாலட்சுமி காலனி வழியாக செல்லக் கூடியதாகும்.

அவர் பேருந்து கட்டிப்பிடித்து அழும் வீடியோவனது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஓட்டுநர் முத்துப்பாண்டி, தன்னுடைய பெற்றோருக்கு அடுத்து மதித்தது ஓட்டுநர் தொழில் என்றும், இதனாலேயே தனக்கு சமூகத்தில் பேரும் புகழும் கிடைத்ததாக கூறியிருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com