அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது - எடப்பாடி பழனிசாமி

Published on

பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்ப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அதிமுக மாநாட்டிற்கான இலக்சின்யை வெளியிட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பொதுசிவில் சட்டத்திற்கு அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விட்டோம் அதுதான் தற்போதும் எங்களுடைய நிலைப்பாடு.” என்றார்.

பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது, அதை எந்த வடிவிலும் நிறைவேற்றக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய அவர், “மேகதாதுவில் அணை விவகாரத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால் தற்போது கர்நாடகாவில் புதிதாய் ஆட்சி பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிரு தான் காவேரி மேலாண்மை ஆணையம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவின் தொடர் சட்டப்போராட்டத்தின் விளைவாகத்தான் உச்சநீதிமன்றத்தில் அந்த தீர்ப்பை பெற முடிந்தது.

அந்த தீர்ப்பை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுமார் நாட்கள் குரல் கொடுத்தனர், இதனால் நாடாளுமன்ற சுமார் 22 நாட்கள் குரல் கொடுத்தனர் இதனால் நாடாளுமன்ற அவையே ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு சரித்திர சாதனை. விவசாயிகள் உரிமை,பொதுமக்கள் உரிமை, நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீர் முழுவதும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தோடு குரல் எழுப்பியதன் விளைவாகத்தான் காவேரி மேலாண்மை ஆணையம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை முறையாக கொடுத்தார்கள்.

ஆனால் தற்போது ஜூன் மாதத்திற்கான தண்ணீரை திறக்காமல் தமிழக விவசாயிகளுக்கு கர்நாடக அரசு துரோகம் செய்துள்ளது. கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் வேண்டுமென்றே திட்டமிட்டு இது போன்ற செய்திகளை வெளியிட்டுள்ளார் என்றே நான் கருதுகிறேன்" என்றவர், மருத்துவத்துறையில் தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com