வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: நடவடிக்கை மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுரை!

டெங்கு பரிசோதனை
டெங்கு பரிசோதனை
Published on

தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த சில தினங்களாக, கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது இது குறித்து, பொது சுகாதாரத்துறை கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளாவில் எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்களில், கண்காணிப்பு பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுத்து, அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் துணை சுகாதார இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதையடுத்து, மாணவர்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் துவக்கத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.

அதேபோல், கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, தசைவலி, சருமத்தில் தடிப்புகள், கண்வலி, கடுமையான தலைவலி மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என பொது சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com