முதலமைச்சரிடம் அசோக் லேலண்டு மேலாண் இயக்குநர் ஷேணு காசோலை வழங்கினார்
முதலமைச்சரிடம் அசோக் லேலண்டு மேலாண் இயக்குநர் ஷேணு காசோலை வழங்கினார்

அசோக் லேலண்டு ரூ 3 கோடி, பி.எஸ்.ஜி. கிரீன் ரூ. 1 கோடி புயல் நிவாரண நிதிக்கு நன்கொடை!

Published on

சென்னை, சுற்றுவட்டார மாவட்டங்களைத் தாக்கிய மிக்ஜம் புயல் நிவாரண நிதிக்காக, கோவை பி.எஸ்.ஜி. குழுமத்தின் லீப் கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அதன் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் கார்த்திகேயன், தலைமைச் செயல் அலுவலர்தேவ் ஆனந்த் ஆகியோர், தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் இன்று இத்தொகைக்கான காசோலையை வழங்கினர். 

அசோக் லேலண்டு நிறுவனத்தின் சார்பில் 3 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. அதன் மேலாண்மை இயக்குநர் ஷேணு அகர்வால், முதலமைச்சர் ஸ்டாலினிடம் காசோலையை வழங்கினார். அசோக் லேலண்டு பெருநிறுவன சமூகப் பொறுப்புப் பிரிவுத் தலைவர் பாலச்சந்தர், துணைத்தலைவர் சசிக்குமார் ஆகியோரும் உடனிருந்தனர். 

இரண்டு சந்திப்புகளிலும் தொழில்- முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உடனிருந்தார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com