தமிழ்நாட்டுப் பெண்கள் முதலிடம்! எதில் தெரியுமா?

பெண் தொழில்முனைவோர் (மாதிரிப்படம்)
பெண் தொழில்முனைவோர் (மாதிரிப்படம்)
Published on

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட பெண் தொழில் முனைவோர் அதிகம் உள்ள மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாக ‘பாபுலஸ் எம்பவர்மெண்ட் நெட்வொர்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேறிய மாநிலமாக உள்ளது. குறிப்பாக ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு, மின்னணுப் பொருள்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் உற்பத்தி – ஏற்றுமதி, புத்தொழில் சூழல் அமைவுக்கான சூழல், உயர்கல்விச் சேர்க்கை போன்றவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில், மற்றொரு சாதனையும் சேர்ந்துள்ளது.

மத்திய அரசின் வருடாந்திர பணியாளர் சர்வேயின் அடிப்படையில், ‘பாபுலஸ் எம்பவர்மெண்ட் நெட்வொர்க்’ (Populus Empowerment Network) நிறுவனம் வெளியிட்ட தகவலில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் அதிக தொழில்முனைவோர் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அந்த நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 69. 19 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 13.95 சதவீதமும், குஜராத்தில் 13.16 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 03.96 சதவீதமும் பெண் தொழில் முனைவோர் உள்ளதாக தெரியவந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com