குறைந்த கட்டண விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் சார்பில், அதன் முன்னாள் புரொமோட்டர் கலாநிதிமாறனிடம் 450 கோடி ரூபாயைத் திரும்பக் கேட்கவுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகளை கடந்த 2015இல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத் தலைவர் அஜய்சிங்குக்கு தன் பங்குகளை விற்பனை செய்திருந்தார். இந்தப் பரிமாற்றம் தொடர்பாக இரு தரப்புக்கும் பிரச்னையாகி, வழக்கு தீர்ப்பாயம், நீதிமன்றம் எனச் சென்றது.
தில்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 17ஆம் தேதி நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா, இரவீந்திர துடேஜா ஆகியோர் அளித்த தீர்ப்பு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்தது.
அதன்படி, இன்று அஜய்சிங் வெளியிட்ட அறிவிப்பில், கலாநிதியிடமிருந்து தாங்கள் 450 கோடி ரூபாயைத் திரும்பப்பெறப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத் தரப்பில், கலாநிதி தரப்புக்கு 530 கோடி ரூபாய் முதலும் 150 கோடி ரூபாய் வட்டியுமாக 780 கோடி ரூபாய் அளிக்கப்பட்டிருந்தது.