ஐஸ்கிரீம் விலையேற்றம் - ஆவின் விளக்கம்!

ஆவினில் விற்பனை செய்யப்படும் பொருட்கள்
ஆவினில் விற்பனை செய்யப்படும் பொருட்கள்
Published on

ஐஸ்கிரீம் விலையேற்றம் தொடர்பாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம், பால்கோவா, நெய், வெண்ணெய், மில்க் ஷேக், ஐஸ்கிரீம் உட்பட 100-க்கும் மேற்பட்ட பால் சார்ந்த பொருட்களை ஆவின் விற்பனை செய்து வருகிறது.

கோடைக் காலங்களில் மோர், ஐஸ்கிரீம், லஸ்ஸி உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரிப்பது வழக்கம் என்பதால், ஆவின் பாலகங்களில் விற்கப்படும் ஐஸ்கிரீம் விலையை திடீரென உயத்தியுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு ஐஸ்கிரீமின் விலையும் ரூ. 2 முதல் ரூ.5 வரை உயர்கிறது. சாக்கோபார் ஐஸ்கிரீம் ரூ.20இல் இருந்து ரூ.25 ஆகவும், வெண்ணிலா கப் ரூ.28இல் இருந்து ரூ.30 ஆகவும், வெண்ணிலா கோன் ரூ.30-லிருந்து ரூ.35 ஆகவும், சாக்லேட் கோன் ரூ.30-லிருந்து ரூ.35 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், ஐஸ்கிரீன் விலை உயர்வு குறித்து ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோடைக் காலத்தில் கூடுதலாக 20% விற்பனையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இடுப்பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் தற்பொழுது நான்கு வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டுமே ஆவின் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. இந்த சிறிய விலையேற்றம் இன்றியமையாததாகும் என்றும் தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com