சரியும் தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை
தங்கம் விலை
Published on

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.53,360-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

இதனிடையே மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து அன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,300 குறைந்து ரூ.52,400-க்கு விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளயின் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டு உயரத் தொடங்கியது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.51,200-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று மேலும் கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.6,330-க்கும் விற்பனையாகிறது.

அதுபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.87க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.87,000க்கும் விற்பனையாகிறது.

இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ. 1, 120 குறைந்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com