ஏறுமுகத்தில் தங்கம் விலை... ஒரு கிராம் 7 ஆயிரத்தை தாண்டியது!

gold rate
தங்கம் விலை (மாதிரிப்படம்)
Published on

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.56,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22ஆம் தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்து இருக்கிறது. அதிலும் கடந்த 10 நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 13 தேதி ஒரே மட்டும் சவரனுக்கு ரூ.960 அதிகரித்தது. நேற்றைய தினம் சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.56,000 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து 7 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,060-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.480 உயர்ந்து ரூ.56,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com