பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை!

Anil Ambani
அனில் அம்பானி
Published on

அனில் அம்பானி பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ரூ. 25 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி.

தொழிலதிபர் அனில் அம்பானியின் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக திவாலாகி நஷ்டத்தில் மூழ்கி வருகின்றன. அதனால் அவருக்கு மட்டுமின்றி, முதலீட்டாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், முதலீட்டாளர்களின் நிதியை அனில் அம்பானி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்படி, இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானியின் நிறுவனம் உள்ளிட்ட 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் செபி அமைப்பு தடை விதித்துள்ளது.

தொழிலதிபர்கள் பாப்னாவுக்கு ரூ.27 கோடியும், சுதால்கருக்கு ரூ.26 கோடியும், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ.6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனப் பங்குகளுக்கு 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும், இயக்குனராகவோ, நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com