சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்!

Actor Rajini
நடிகர் ரஜினிகாந்த்
Published on

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு வயிற்று பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவர்கள் குழுவினர், ரத்த நாளத்தில் உள்ள வீக்கத்தை சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' பொருத்தினர். ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்தின் உடல்நிலை முன்னேறியதை தொடர்ந்து, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மருத்துவக்குழு அவரை கண்காணித்து வந்தது.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் பூரண குணடைந்து மனைவி லதா மற்றும் உறவினர்கள், மருத்துவர்களுடன் ரஜினிகாந்த் வழக்கம்போல பேசினார். ரஜினிகாந்த் நலமாக இருப்பதாகவும், இன்றோ அல்லது நாளையோ வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் தனது வீட்டுக்குத் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், மருத்துவர்கள் ஆலோசனைகளின்படி சில வாரங்கள் அவர் தனது இல்லத்திலேயே ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com