அன்று அனாதை! இன்று ஐரோப்பாவின் எட்டாவது பெரிய பணக்காரர்!

அன்று அனாதை! இன்று ஐரோப்பாவின் எட்டாவது பெரிய பணக்காரர்!
Published on

அந்த சிறுவன் பிறப்பதற்கு ஐந்து மாதம் முன்பே அப்பா தவறிவிட்டார். அவனுக்கு உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். அம்மாவால் அவனை வளர்க்க வசதி இல்லை. அனாதை ஆசிரமம் ஒன்றில் சேர்ப்பித்தார். அதில் வளர்ந்த பையன் கொஞ்சம் பெரியவனானதும் குடும்பத்துக்கு சம்பாதிக்க ஆட்டோ பொருட்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிகளுக்கு பிரேம் செய்யும் தொழிற்

சாலையில் வேலைக்குச் சேர்ந்தான்.  அங்குஒரு விபத்தில் அவனுக்கு விரலின் ஒரு பகுதியும் போனது. 23 வயதில் அவன் சொந்தமாக ஒரு கடை ஆரம்பித்து கண்ணாடிகள் செய்ய ஆரம்பித்தான். அந்த கடை உலகின் மிப்பெரிய குளிர்கண்ணாடிகள் உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறியது. புகழ்பெற்ற கண்ணாடி பிராண்டான  ரே -பான் இன்று இதன் வசம் என்றால் உடனே புரிந்துவிடும்! அதன் உரிமையாளர் பெயர் டெல் விச்சியோ.

இத்தாலி நாட்டில் மிலன் நகரில் பிறந்த டெல் விச்சியோ இன்று அந்நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரர். உலகின் 38வது பெரிய பணக்காரர்.

அவரது நிறுவனத்துக்கு உலகெங்கும் 6000 கடைகள் உள்ளன, 73000 பேர் வேலை செய்கிறார்கள்.

ஆரம்பத்தில் தன்னுடைய தொழில்நுட்ப அறிவை வைத்து கடை ஆரம்பித்தவர் அத்துடன் நின்றுவிடாமல் அதைப் பெருக்கவேண்டும் என்று கனவு கண்டார். லக்சாட்டிகொ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஆய்வு செய்து கண்ணாடியின் தரத்தை பெருக்கினார். விநியோகம் மற்றும் சில்லரை விற்பனையில் முக்கியமான முடிவுகள் எடுத்ததும் காரணம்.

மெல்ல இத்தாலியில் இருந்த மற்ற பிராண்டுகளான வோக், பெர்சால் ஆகியவற்றை வாங்கியவர் கடைசியில் அமெரிக்க பிராண்டான ரே பானையும் வாங்கினார். சமீபத்தில் இவர் விழுங்கியது ஓக்லே என்ற பிராண்ட்!

ஐரோப்பாவில் இன்று எட்டாவது பணக்காரர் டெல்விச்சியோ. அவர் ஒரு காலத்தில் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர் என்றால் நம்புவீர்களா?

பண மொழி

உங்கள் இலக்குகளை மற்றவர்கள் 

நகைக்கக்கூடிய அளவுக்கு உயரமாக 

நிர்ணயிக்கலாம்.

நீங்கள் அவற்றில் 

தோற்றாலும் அந்த தோல்வி மற்றவர்களின் 

வெற்றியைவிட உயர்வானதாகவே இருக்கும்.

- ஜேம்ஸ் காமரூன்

ஜனவரி, 2015.

Dell

தங்கமுலாம் பூசிய டிவி!

சாம்சங் நிறுவனம் 78 இன்ச் டிவி ஒன்றை தயாரித்துள்ளது. அதன் ஸ்பெஷாலிட்டி அதன் பின்புறம் தங்கமுலாம் பூசியிருப்பதுதான். இவ்ளோ பெரிய டிவியை வைத்திருப்பதே பெரிய விஷயம்தான். அதிலும் தங்க டிவி என்றால் எவ்வளவு பெரிய கௌரவம்!

இது அல்ட்ரா ஹை டெபினஷன் டிவி! இந்த தொழில்நுட்ப வகையறா டிவிகள் விற்பனைக்கு வர ஆரம்பித்ததே 2011-ல்தான். இதன் விலை சாதாரணமாகவே அதிகம்தான். இந்த டிவிகளை பிரபலப்படுத்தவே தங்கமுலாம் பூசிய டிவியைக் கொண்டுவந்து அதை ஏலத்தில் விட்டுவிற்பனை செய்யப்போகிறார்கள். சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இது விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! இந்த ஏலத்தில் கிடைக்கும் தொகை பார்வையற்றோருக்கான தொண்டு நிறுவனத் துக்கு அளிக்கப்படுமாம்!

logo
Andhimazhai
www.andhimazhai.com