ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வேங்கட மூர்த்தி முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர். அந்திமழைக்காக அவர் வழங்கும் பிரத்யேக சமையல் குறிப்பு இது.
புதினா சிக்கன்
தேவையானவை:
சிக்கன் - 500கி
புதினா - ஒரு கத்தை
வெங்காயம் - 11/2 கப்
தக்காளி - 2 கப்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
இஞ்சிபேஸ்ட் - 1 தேக்கரண்டி
பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 11/2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
கரம்மசாலா பவுடர் - லீ தேக்கரண்டி
இலவங்கப்பட்டை,
கிராம்பு,ஏலக்காய் - 1 (ஒவ்வொன்றும்)
கொத்தமல்லி தழை - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை: சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். புதினாவை நன்றாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் இலவங்கப்பட்டை,கிராம்பு,ஏலக்காய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சிபேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். அதன் பின்பு மல்லித்தூள், மிளகாய்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும். இதனுடன் புதினா பேஸ்ட்டை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும். பின்பு இதனுடன் தக்காளியை சேர்த்து பிசைந்து நன்கு கலக்கவும். கடைசியாக சிக்கனையும் சிறிதளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். நறுக்கிய கொத்தமல்லி கொண்டு அலங்கரித்து, சப்பாத்தி, அரிசி சாதம் அல்லது புலாவுடன் சேர்த்து பரிமாறவும்.