சிக்கன் - 450கி
இஞ்சி - 10கி
பூண்டு - 10கி
மிளகாய்தூள் - 10கி
கொத்தமல்லி தூள் - 20கி
மஞ்சள் தூள் - 3கி
கரம் மசாலா தூள் - 3கி
பச்சை மிளகாய் - 10கி
வெங்காயம் - 100கி
எண்ணெய் - 25கி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: கோழி இறைச்சியைச் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அதனுடன் மசாலா தூள்களை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை வெட்டி வைத்துக்கொள்ளவும். அடிக்கனமுள்ள பாத்திரத்தில் எண்ணெய்யை சூடாக்கி அதனுள் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். அதனுடன் சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு சிறிது தண்ணீரை
சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக வேகவிடவும். சிக்கன் நன்றாக வெந்தபின் மிதமான சூட்டில் தண்ணீர் வற்றும் வரை இருக்கவேண்டும். பின்பு ரொட்டி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.
அக்டோபர், 2015.