சுன் சுன் தாத்தா

Published on

அமிழ்திலும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் என்கிறார் திருவள்ளுவர். தம் குழந்தைகளின் கை-யால் பிசையப்பட்ட சோறு, அக்குழந்தையைப் பெற்றவர்களுக்கு அமிழ்தத்தைவிட மிகச்சுவை-யானது என்பது இதன்பொருள். இன்றைய காலம் இப்படித்தான் இருக்கிறதா? குழந்தைகள் இப்படிக்கொண்டாடப்படுகிறார்களா? என்கிற கேள்விக்கு விடை சொல்வது கடினம்தான்.

‘மெட்ரோபாலிட்டன் சிட்டி’ களில் குழந்தைகளின் நிலை இப்போது எவ்வளவு கொடுமையானதாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பேச நடிகர் நாசர் ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர் சுன்சுன்தாத்தா. தமிழ்,தெலுங்கு,இந்தி என்று எல்லா மொழிகளிலும் ஓய்வின்றி நடித்துக்கொண்டிருக்கும் நாசர், ஓய்வுக்காக மலேசியா சென்ற இடத்திலும் சும்மா இருக்காமல் எடுத்த படம்தான் சுன்சுன்தாத்தா.

இந்தப் படத்தில் நாசரின்  மூன்றாவது மகன் அபிஹசன் கதைநாயகனாக இருக்--கிறார். மலேசியாவில் புகழ-பெற்ற நடிகரான டத்தோ ஜமாலிசதத், தாத்தா வேடத்தில் நடித்திருக்கிறார்.அபியின் தந்தையாக நாசரும், தாயாக அருணாபாலா என்பவரும் நடித்-திருக்கிறார்கள். மொத்தம் நான்கு பேரை மட்டுமே கொண்ட இந்தப் படம், குழந்தைகளை - அவர்களுடைய கொண்டாட்டங்களைத் துறந்துவிட்டு டாம்பீக வாழ்க்கை-யைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோரைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிற வண்ணம் எடுக்கப்பட்டிருக்கிறது.

மலேசியாவில் உயர்மத்தியதர வகுப்பினர் குடி-யிருக்கும் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்று-படுக்கை அறைகளைக் கொண்ட உள்ள ஒரு வீட்டில்-தான் கதை தொடங்குகிறது,கதை முடிவதும் அங்கே-தான். கனடாவில் ஒருஇலட்சம் டாலர் பிஸினஸை வெற்றிகரமாக முடித்து-விட்டேன்,அதற்காக நமக்கும் பலஇலட்சம் கிடைக்கும் என்று மனைவி-யிடம் செல்பேசியில் பேசுகிற கணவன். நான் நுவரேலியாவில் இருக்கிறேன் என்னுடைய பிஸினஸ்-மீட்டிங் சக்ஸஸ்-புல்லாகப் போய்க்-கொண்டிருக்-கிறது என்கிற மனைவி.அதேநேரம் அவர்களுடைய ஐந்தாவது படிக்கிற மகன், தனியே உட்கார்ந்து தொலைக்காட்சியில் வருகிற ஒரு திகில்தொடரைக் கண்டு பயந்து அலறுகிறான்.அவனை அரவணைக்கவோ ஆறுதல்  சொல்லவோ ஆளில்லை.

அவனுடைய வாழ்க்கையில் வசந்தமாக தந்தையை வளர்த்து ஆளாக்கிய தாத்தா, வைத்தியத்துக்காக அந்த வீட்டில தங்க நேருகிற காலம் வருகிறது. ஆனால் தாயின் சகிப்புத்தன்மையற்ற செயலால் அந்தத் தாத்தாவின் அண்மையையும் விரைவில் இழக்க நேருகிறது. அவனின் தனிமையை அந்த பெற்றோர் உணர்ந்தார்களா? என்பதை  நெஞ்சில் அறைகிறமாதிரி சொல்கிறார்கள்.

ஆஸ்திரேலியா போனீங்களாப்பா, அங்கே கங்காருவைப் பார்த்தீங்களா? ஆப்பிரிக்கா போனபோது பெரிய யானை-களைப் பார்த்தீர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்கும் சிறுவன், இதை எதையுமே நீங்கள் பார்க்கவில்லையெனும்போது  அங்கே போனீர்கள் என்பதை நான் எப்படி நம்புவது? என்று கேட்ப-தோடு நில்லாமல், ஆனால் உலகத்-தில் எல்லா இடத்திலும் டாலர் இருப்பது மட்டும் உங்கள் பேச்சில் தெரிகிறது என்று சொல்லும்-போது விக்கித்துத் தலைகுனிகிறார் அந்தத்தந்தை.இது மாதிரியான வசனங்கள் மற்றும் காட்சிகள் படத்தில் நிறைந்திருக்கின்றன. இந்தப்-படத்தில் மதுரைபிரபாகர் இசையில் தனிக்கொடி என்பவர் எழுதியிருக்கும் பாடல், நாசரின் எண்ணங்களுக்கு வலுச்சேர்க்கும் விதம் சிறப்பாக அமைந்திருக்கிறது. இயற்கை, ஒரு சிறந்த பள்ளிக்கூடம் ஆனால் அது கேள்விகள் கேட்காது என்று தொடங்கும் அந்தப் பாடலை தனியாகக் கேட்டாலே, அது ஒரு கதை சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது.

முழுநீளப்படமென்றால் இரண்டரைமணி நேரம் அல்லது அதற்கு மேல் ஓடக்கூடியது என்பதை மாற்றி ஒன்றரை மணிநேரப் படமெடுக்கும் திட்டத்தைப் பல காலமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்தப்படத்தில் நாசர் அதைக் கையாண்டிருக்கிறார். கதைக்களம் மட்டு-மின்றி படப்பிடிப்பு முழுவதும் மலேசியாவிலேயே நடந்-திருக்கிறது. தமிழ் மட்டு-மின்றி மலாய் மொழியிலும் இப்படத்தை வெளியிட இருக்கிறார்களாம். உலக-மயமா-தலுக்கு எதிர்வினையாற்றும் படமென்பதால் இதை உலகம் முழுவதும் கூட வெளியிடலாம் என்றும் சொல்லப்படுகிறது.

மிகக்குறைந்த நாட்களில் குறைந்த தொழில்நுட்ப வசதி-களைக் கொண்டு இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம். நான் கண்டு கேட்டு உணர்ந்த ஒரு கொடுமையான செய்தியை இந்த ஊடகத்தின்மூலமாக மக்களிடமும் சொல்லவேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்கிறார் நாசர்.

டிசம்பர், 2012.

logo
Andhimazhai
www.andhimazhai.com