விஜய், விஷால் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நடிகர் ரஜினிகாந்த், “சாரி… அரசியல் கேள்விகள் கேட்க வேண்டும்” என்று பத்திரிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
லால் சலாம் படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரஜினிகாந்த், தான் வீல் சேரில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வேட்டையன் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா புரடெக்ஷனுக்கும், இயக்கிய ஐஸ்வர்யா உட்பட படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
‘வேட்டையன்’ படப்பிடிப்பு 80% நிறைவடைந்துள்ளது. இன்னும் 20 % மீதமுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, விஜய், விஷால் அரசியல் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ‘சாரி… அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்’ என்றார்.