அயலான் திரைப்படத்தின் இசை கோர்ப்பு பணி
அயலான் திரைப்படத்தின் இசை கோர்ப்பு பணி

அயலான் படத்தின் டீசர் 6ஆம் தேதி வெளியீடு!

Published on

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தின் டீசர் வரும் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2018ல் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கிய படம் 'அயலான்'. ரகுல் பீர்த் சிங் , இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏலியன் தொடர்பான கதையில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படம் இந்த வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் 2024 பொங்கலுக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், வருகின்ற அக்டோபர் 6ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் இன்று ஒரு போட்டோவை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில். ஏ.ஆர்.ரகுமான், சிவகார்த்திகேயன், ரவிக்குமார் ஆகியோருடன் ஒரு ஏலியன் பொம்மையும் உடன் உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com