தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தியாகு அளித்த உருக்கமான பேட்டி
"விஜயகாந்த் மாதிரி ஒரு தைரியசாலியைப் பார்க்க முடியாது. ஒருமுறை மனோரமாவைபார்த்துவிட்டு நானும் விஜயகாந்தும் எல்டம்ஸ் சாலையில் வந்துகொண்டிருந்தோம். அப்போது, பெண் ஒருவரின் செயினை அறுத்துக்கொண்டு ஒருவன் ஓடினான்.
அந்த பெண் ”அய்யோ திருடன்...” என்று கத்தியதும் விஜயகாந்த் அந்த திருடனை துரத்திக் கொண்டு ஓடினார். நானும் ஓடினேன்.
அந்த திருடனை மடக்கிப் பிடித்து, செயினை வாங்கி அந்தப் பெண்ணிடம் பெண்ணிடம் ஒப்படைத்தார். அந்தப் பெண் உடனடியாக விஜயகாந்தின் காலில் விழுந்துவிட்டார்.
அந்தப் பெண்ணை அனுப்பிவிட்டு, என்னிடம் அந்த திருடனைக் காண்பித்து இவனை என்னடா பண்ணலாம் என்று கேட்டார். நான், டேய் விட்ருடா என்று சொன்னேன்.
அந்த செயின் அறுத்த நபர், “அண்ணே நான் உங்கள் பெரிய ரசிகன் அண்ணே” என்று அழுதபடி விஜயகாந்தை பார்த்து சொன்னான். அவர் உடனே அந்த திருடனுக்கு பளார் பளார் என இரண்டு அறைகளைக் கொடுத்துவிட்டு ”என் ரசிகனாக இருந்துகொண்டு ஏன் டா இப்படிப் பண்ணின” என்று கோபமாகத் திட்டி துரத்திவிட்டுட்டான். அப்படி இருந்தவனை இப்போ இப்படி பார்க்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கிறது" என்றார்.