நேற்று ராஷ்மிகா, இன்று ஆலியா பட்… இதுக்கு முடிவே இல்லையா?

ஆலியா பட்
ஆலியா பட்
Published on

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் முகத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் போலி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

டீப்ஃபேக் (Deepfake) என்பது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான முறையில் வீடியோ, புகைப்படங்களில் ஒரு நபரை போலியாகச் சித்திரிப்பது அல்லது ஆள்மாறாட்டம் செய்வதாகும்.

இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராஷ்மிகா மந்தனா முகத்தை மார்ஃப் செய்து ஒரு வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, நடிகைகள் கஜோல், கேத்ரீனா கைஃப் ஆகியோரின் போலி வீடியோக்களும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் டீப் ஃபேக் போன்ற தொழில்நுட்பங்கள், போலி தகவல்கள் பரவுதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த விரைவில் புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது.

ஆனாலும், பாலிவுட் நடிகை ஆலியா பட் முகத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

ஆபாச அசைவுகளை வெளிப்படுத்தும் ஒரு பெண்ணின் உடலில் ஆலியாவின் முகம் வைக்கப்பட்டு அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com