சார் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி விமலின் நடிப்பைப் பாராட்டிப் பேசியுள்ளார்.
இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார். படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று பெயரிட்டு பின் சார் என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:
“நான் கூத்துப்பட்டறையில் வேலைப் பார்த்தபோது விமலின் ரசிகன் நான். பிரம்மாதமாக நடிப்பான். அதை அவனிடமே சொல்லியிருக்கிறேன். இந்த படம் விமலுக்கு பெரிய கம்பேக்கா இருக்கும்.
சார் படத்தைப் பார்த்துவிட்டேன். மிக நல்ல படம். மீண்டும் ஒருமுறை பார்க்கும் எண்ணத்தை தரும். நடிகர் விமலுக்கு முக்கியமான படமாக இது இருக்கும். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். வசனங்களும் நன்றாக வந்திருக்கின்றன. படத்தின் கிளைமேக்ஸ் திருப்தியாக இருக்கும்.” எனக் கூறினார்.