தங்கலான் அதிகாரபூர்வ வசூல்…. விக்ரம் வெளியிட்ட கணக்கு!

Thangalan Movie
தங்கலான் திரைப்படம்
Published on

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், விக்ரம், பார்வதி, மாளவிகா, பசுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான தங்கலான் ஆகஸ்ட்15 ஆம் தேதி வெளியானது.

கோலார் தங்கவயலை பின்னணியாகக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றையும் அவர்களின் போராட்டத்தையும் பேசிய தங்கலான் சமூக ஊடகத்தில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.

படம் வெளியான முதல் நாளிலேயே ரூ. 26 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. தமிழில் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானாவில் வசூலை அள்ளுவதாக கூறப்படுகிறது. இந்தியிலும் இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தங்கலான் படத்தின் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விக்ரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, தங்கலான் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகவும், இது நீதிக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும் பதிவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com