ராட்சசன் படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்!

producer Dilli Babu
தயாரிப்பாளர் டில்லி பாபு
Published on

மரகத நாணயம், ராட்சசன், ஓ, மை கடவுளே படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு (வயது -50) உடல் நலக்குறைவால் காலமானார்.

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வலம் வரும் நிறுவனம் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் ஜி.டில்லி பாபு. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்தார். அதில் சிகிச்சை பலனின்றி இன்று (செப்டம்பர் 9) அதிகாலை காலமானார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது. திரையுலகினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

2015ஆம் ஆண்டு உறுமீன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் டில்லி பாபு. அதனைத் தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர், மிரள் மற்றும் ‘கள்வன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது கூட தொடர்ச்சியாக படங்கள் தயாரிப்பதற்கு பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு முன் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்தார். தனது மகனை நாயகனாக்க வேண்டும் என்பது இவருடைய கனவு. ’வளையம்’ என்ற பெயரில் தனது மகன் தேவ் நடிக்க ஒரு படத்தினை தயாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com