லால் சலாம் திரைப்படம்
லால் சலாம் திரைப்படம்

லால் சலாம் படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்!

Published on

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தநிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படத்தில், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினியின் காட்சிகள் 20 நிமிடங்கள் வரை இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியிருந்து.

இந்நிலையில், 2024 பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது..

logo
Andhimazhai
www.andhimazhai.com