மாமன்னன் படத்தின் ஒரு காட்சி
மாமன்னன் படத்தின் ஒரு காட்சி

கடைசிப் படத்தில் வசூலை அள்ளிய உதயநிதி ஸ்டாலின்!

Published on

மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. உதயநிதி நடிக்கும் கடைசிப் படம் என மாமன்னன் சொல்லப்பட்ட நிலையில், அந்த படத்தின் முதல் நாள் வசூல் பிரமிக்க வைக்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு,கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு இது கடைசி படம் என்பதாலும், பரியேறும் பெருமாள், கர்ணன் இயக்குநரின் அடுத்த படைப்பு என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு இருந்தது.

மாமன்னன் படத்துக்கு நேற்று எதிர்பார்த்ததைவிடவும் நல்ல வரவேற்பு இருந்தது. உதயநிதி ஸ்டாலினுக்கு இதற்கு முன்பு இப்படி ஒரு வரவேற்பு இருந்ததில்லை. அதேபோல் வடிவேலுவுக்கும் இது ஒரு திருப்புமுனை திரைப்படமாக இருக்கும்.

இந்தநிலையில், மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மாமன்னன் படம் முதல் நாளில் 7 கோடி ரூபாய்வரை தமிழ்நாட்டில் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதாலும், படமும் நல்ல விமர்சனத்தைப் பெற்றுவருவதாலும் போகப்போக வசூல் அதிகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com