ஜவான் படத்தின் முதல் பாடல் வெளியானது!

ஜவான் படத்தின் முதல் பாடல் வெளியானது!
Office
Published on

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.

தமிழில் இளம் இயக்குநராக அறியப்பட்ட அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது. 

படக்குழு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு அசத்தி வருகிறது.

இந்நிலையில், ஜவான் படத்தில் அனிருத் பாடியுள்ள முதல் பாடலை ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ‘வந்த இடம் ஏ காடு நீ தான் பலியாடு’ என ஒலிக்கும் பாடல் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com