ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ரெபல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Published on

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெபல்' மார்ச் 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகும் படம் ரெபல் . இதில், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

உண்மை சம்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் மார்ச் 22 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com