எனது ரேஷன் கார்டு!

எனது ரேஷன் கார்டு!
Published on

எல்லாவற்றையும் மெனக்கெட்டு வித்தியாசமாக செய்பவர் ஒருவர் தமிழ் சினிமாவில் உண்டென்றால் அது இயக்குநர், நடிகர், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தான்! அவர் இப்போது 'ஒத்த செருப்பு’ என்ற படத்தில், ஒத்தை ஆளாக நடிக்கிறார்.. அவரிடம் பேசினோம்;

ஒவ்வொரு படத்திற்கான தலைப்பு தேர்வு செய்ய எத்தனை நாள் பிடிக்கும்? எந்த அடிப்படையில் படத்திற்கு பெயர் வைக்கிறீர்கள்?

'சமீபத்தில் மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணன் சொன்னார்; நீங்க கதை
சொல்லும் முறை வேற மாதிரி இருக்கு. ஒரு ஊருல ஒரு அப்பா அம்மானு ஆரம்பிக்கிற கதைய
 நீங்க வேற ஊர்ல இருந்து சொல்ல ஆரம்பிக்கிறீங்க. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கூட இது நடந்தது.

மார்டன் ஆர்ட் பார்த்ததும் டக்குனு புரிந்து விடாது. 
 ஆடியன்சுக்கு இனிமேல் நீங்க புதுசா ஒரு கதையை
சொல்லப் போவதில்லை. அவங்களுக்கு பல நூறு கதைகள் தெரியும். அதை  நெட்டில். மொபைலில் பார்த்துவிட்டு தான் தியேட்டருக்கு வர்றாங்க  அவர்களை சர்ப்ரைஸ்  பண்ற மாதிரி திரைக்கதை இருக்கணும்.  நான் திரைக்கதையை  ஏ,பி, சி- யிலிருந்து தொடங்க மாட்டேன். டி அல்லது  ஹெ-ச்சிலிருந்து ஆரம்பிப்பேன். அந்த கதை சொல்கிற போக்கில் இருந்து. கதைக்கு பொருந்துகிறமாதிரி  எந்த தலைப்பாவது இருக்கான்னு பார்ப்பேன். 

ஒரு கதைக்குள்ள குறைந்தது பத்து தலைப்பு இருக்கும் ஒத்தசெருப்பு தவிர  'அவன் தனிமரம்', 'ஒருவனை தேடும்போலீஸ்' 'விசாரணை' இப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம். ஒருவனை போலீஸ் சுற்றுகிறது. என்றாலே கதைதெரிந்து விடும். படத்தின் கதையும் தெரியக்கூடாது.தலைப்பு பொருந்தணும் அந்த தலைப்பு யோசிக்க தூண்டணும். அப்படிப் பார்த்து வைத்த ஒத்த செருப்பு பலரின் கவனிப்புக்குள்ளாகி இருக்கு. அது யாருடைய செருப்பு? இன்னொரு செருப்பு எங்கே ? இப்படி ஒரு தலைப்பு பல கேள்விகள் ஏற்படுத்த முடியும். இது மண்டையைக்  குடையுற விஷயம்.

சமீபத்தில் ஒரு தொழிலதிபரை சந்தித்தேன். அவர் பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு மத்தியில் இரண்டு மணி நேரம் பேசுவதற்கு ஒரு கோடி ரூபாய் வாங்குகிறார். அங்கே நீங்க வந்து பேசினால் 2 கோடி கொடுப்பாங்க சார். அவ்வளவு பெரிய புத்திசாலி
 நீங்க. உங்க நேரத்தை சினிமாவில் கொட்டுறீங்க என்றார். அவ்வளவு உழைப்பு இங்கே தேவைப் படுகிறது. இங்கே பெரிய பெரிய முதலைகள் இருக்கு. விஜய், அஜித் உள்பட இவங்க படங் களுக்கு  இருக்கிற வரவேற்பு மிகப்பெரியது. அவர்கள் படங்களுக்கு விஜய் 63 அப்படீன்னு தலைப்பு வைத்தால்போதும். ஆனா நமக்கு அப்படியில்லை. நாம தலை கீழாக நின்று
சிரசாசனம் போடணும். அப்போதுதான் நம்ம உழைப்புக்கு கொஞ்சமாவது பலன் கிடைக்கும்.விஜய் படத்தின் கதை என்னவென்று தெரிந்து விட்டாலும் கூட அவருடைய ரசிகர்கள் படத்தை போய் பார்ப்பார்கள், நம்ம தலைவர் எப்படி பண்ணியிருக்கிறார் பார்ப்போம் என்று. ஆனால் இங்கே அப்படியில்லை.‌ இங்கே ஆதாரமாக இருப்பதெல்லாம் கதையும், திரைக்கதையும்தான் .

செருப்பில் என்ன சிறப்பு ?

சிறப்பான பல விஷயங்கள் இருக்கு. அதில் ஒண்ணு சந்தோஷ் நாராயணனின் இசை.  படத்தில் ஒரே ஒரு பாட்டு, அதுவும் உயிரை உலுக்குகிற மாதிரி படத்தினுடைய மொத்த வடிவமும் அந்த பாட்டில் இருக்கிறது. என் உகாண்டா  நண்பர் உமா
சங்கர் அந்த அந்த பாட்டை கேட்டு பத்து விஷயங்கள் கண்டு பிடித்துச் சொன்னார்.  இரண்டாவது ஆஸ்கர் வின்னர் ரசூல் பூக்குட்டி. அவருடைய சவுண்ட டிசைனிங். அவர் இன்று காலை அலைபேசியில் பேசும் போது 'நான் பார்த்ததிலேயே அமேசிங்'னு
சொன்னால் நம்ப படம் தான்' என்றார்.  எத்தனை கோடி சம்பளம் கொடுத்தாலும் கூட நமக்கு பிடிச்சதைச் செய்வதில் இருக்கிற சுகமும் சந்தோஷமும் வேற.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நான் வாங்கியது ரொம்ப கம்மி சம்பளம். அந்த பாத்திரம் பிடித்திருந்ததால் சம்பளமே வேண்டாம் என்றுதான் சொன்னேன். ஆனா இரண்டு நாள்  முன்பு ஒருவர் வந்து கதை சொன்னார். இவ்வளவு சம்பளம் கொடுத் தால் தான் நடிக்க முடியும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டேன் அப்படின்னா என்ன அர்த்தம்? ஒண்ணு பணத்துக்காக இருக்கணும் அல்லது அதுக்குள்ள இருக்கிற கலைக்காக இருக்கணும். ரசூல் பூக்குட்டி இந்த படத்தைப் பண்றது நிச்சயம் பணத்துக்காக அல்ல. படத்தின் இன்னொரு தூண் கேமிராமேன் ராம்ஜி. எடிட்டர் சுதர்சனம் ரொம்ப சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

டைரக்டராகவே இருந்திருக்கலாம் என்று நினைத்தது உண்டா?

இல்லை. நான் ஒரு நடிகனாக இருந்ததால்தான் நான்கு படங்களில் நடித்து சம்பாதித்து வந்து இந்த படம் எடுக்கிறேன். நான் எந்த பெரிய ஹீரோ பின்னாலும் போய் நிற்காமல் என்னை நான் ஹீரோவாக போட்டுப் படம் எடுக்கிற துணிச்சல் என்கிட்ட இருக்கு என்றால் அதுக்கு காரணம் என்கிட்ட இருக்கிற ஸ்ட்ராங்கான டைரக்‌ஷன் தான்.  நான் இதைக் கர்வத்தோடு சொல்லவில்லை. ஆனால் வெளிப்படையான உண்மை

உங்கள் மகள் கீர்த்தனாவும் இயக்குனர் ஆவாரா? மகன் ராதாகிருஷ்ணன் என்ன செய்கிறார்?

கீர்த்தனா மணிரத்னத்திடம் பணிபுரிந்தவர். திருமணம் செய்து கொண்டார் என்றாலும் அவர் நிச்சயமாக படம் இயக்குவார். என்னைப் போல் அவசரப் படாமல் நிதானமாக செய்வார். ராதாகிருஷ்ணனுக்கு நடிப்பில் ஆசை இருப்பதாக தெரியவில்லை, அவர் தொழில்நுட்ப கலைஞராக. ஒரு இயக்குநராகவே விரும்புகிறார். அதற்கான முயற்சிகளில் இருக்கிறார்.  அவர்கள் இருவரும் படம் இயக்குவார்கள். சரியான நேரத்தில் செயல் படுவார்கள். எனக்கு அவசரம். எனக்கு ரேஷன் கார்டு இதுதான்.ரேஷன் வாங்குவதும் இதில் தான். அதனால் தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிறேன்.

ஜுலை, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com