பாடகி சுசித்ராவிற்கு இயக்குநர்கள் சங்கம் கண்டனம்!

tamilnadu film directors association
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்
Published on

மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் மீது பாலியல் குற்றம் சுமத்திய பாடகி சுசித்ராவிற்கு இயக்குநர்கள் சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.

பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், பாலசந்தர் பெண்கள் விஷயத்தில் தவறான எண்ணம் கொண்டவர் என்றும், சாகும் வரை அவர் காமம் பிடித்த ஆணாக இருந்தார் என்றும் பேசியிருந்தார். அவர் கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சசித்ராவை கண்டித்து இயக்குநர்கள் சங்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இயக்குநர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழ்நாடு திரைப்பட உலகில் சமீபத்தில் திரை உலகத்தை சார்ந்தவர்களே திரை உலக கலைஞர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வதும் யூகத்தின் அடிப்படையில் தவறான செய்திகளை பரப்புவதும் வழக்கமாகி உள்ளது.

தமிழ்த்திரை உலகில் என்றும் அழிக்க முடியாத புகழையும், திரை உலகினர் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் அனைவராலும் மதிக்க கூடிய போற்றக்கூடியவராக மிகப்பெரிய சாதனை புரிந்து மறைந்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள். தேசிய விருது, கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே போன்ற மிகப்பெரிய விருதுகளை பெற்று தமிழ் திரை உலகிற்கே பெருமை சேர்த்தவர் பாலச்சந்தர் அவர்கள்.

அவரின் புகழை கெடுக்கும் வண்ணம் தற்பொழுது பாடகி சித்ரா அவர்கள் பாலசந்தர் அவர்களை பற்றி அவதூறாகவும், அவர் புகழை களங்கப்படுத்தும் விதமாகவும் ஒரு பேட்டி கொடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். யாரும் யாரையும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்வது மிகவும் தவறான செயலாகும். இது தொடராத வண்ணம் தடுத்து நிறுத்துவது திரைப்பட உலகில் உள்ள அனைவரின் பொறுப்பாகும். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களை பேட்டி என்ற பெயரில் அவரின் புகழை களங்கப்படுத்திய பாடகி சுசித்ரா அவர்களை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com