Mammootty
மம்மூட்டி

மலையாள திரையுலகில் அதிகார மையம் என ஒன்றும் இல்லை! - நடிகர் மம்மூட்டி

Published on

மலையாள திரையுலகில் அதிகார மையம் என ஒன்றும் இல்லை என நடிகர் மம்மூட்டி கூறியுள்ளார்.

மலையாள திரையுலகை உலுக்கும் பாலியல் சர்ச்சையில் நடிகர் மோகன்லாலைத் தொடர்ந்து மம்மூட்டியும் மௌனம் கலைத்துள்ளார்.

இதுகுறித்து மம்மூட்டி கூறியிருப்பதாவது: “மலையாள திரையுலகில் அதிகார மையம் என ஒன்றும் இல்லை. ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளை வரவேற்கிறேன். பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டிய நேரம் இது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும்.

காவல் துறை நேர்மையாக விசாரிக்கட்டும். தண்டனைகளை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் நிகழ்வுகளை வெளிப்படுத்திய நீதிபதி ஹேமா குழு அறிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீதான பாலியல் புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புகார்களை விசாரிக்க 7 காவல் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. நடிகர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அடுத்து, மோகன்லால் தலைமையிலான மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு பதவி விலகியது.

இதைத் தொடர்ந்து, மோகன்லால் முதன்முறையாக செய்தியாளர்களைச் நேற்று சந்தித்தார். அப்போது, மலையாள திரையுலகில் எழுந்துள்ள பாலியல் புகார் விவகாரத்தில் எந்த அதிகாரக் கும்பலிலும் நான் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com