தியேட்டர் கட்டணங்களை உயர்த்த திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

தியேட்டர் கட்டணங்களை உயர்த்த திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!
Published on

தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர் கட்டணங்களை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், "கடந்த 16 அக்டோபர் 2017 அன்று தமிழக அரசாணை மூலம் எங்களுக்கு கட்டண விகிதிம் நிர்ணயித்து ஆணையிட்டது. 6 ஆண்டுகள் கடந்து விட்டதாலும் நடைமுறை செலவுகள் அதிகரித்து விட்டதாலும் திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே திரையரங்க உரிமையாளர்களைக் காப்பாற்ற கீழ்க்கண்டவாறு கட்டணங்களை உயர்த்தி வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்," என தெரிவித்துள்ளனர். அவர்கள் கோரிக்கை வைத்துள்ள கட்டணங்கள் விவரம்.

தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு அளித்த கோரிக்கை மனு
தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு அளித்த கோரிக்கை மனு

- மல்டிபிளக்ஸ் - ஏசி தியேட்டர் ரூ 250, நான் ஏசி ரூ.150

- மாநகரம், நகரம், டவுன் பஞ்சாயத்து கிராம பஞ்சாயத்து - ஏசி தியேட்டர் ரூ.200 நான் ஏசி ரூ.120

- ஐமாக்ஸ் - ரூ.450

- எபிக் - ரூ400

- சாய்வு இருக்கை தியேட்டர்கள்- ரூ.350

தியேட்டர் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பது சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை தியேட்டர் கட்டணம் உயர்ந்தால் மக்கள் ஓடிடி தளங்களை நோக்கி படையெடுக்க வாய்ப்புகள் அதிகம். அதேபோல், சாதாரண மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதும் குறையலாம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com