ரஜினிகாந்த்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் புதிய வேண்டுகோள்!

ஜெயிலர் ரஜினி
ஜெயிலர் ரஜினி
Published on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் உள்ள எல்லா திரையரங்குகளிலும் ஜெயிலர் படத்தை திரையிட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்

நெல்சன் இயக்கத்தில் னிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார். சுனில், தமன்னா மற்றும் பலர் நடித்துள்ள படம் ஜெயிலர். இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், "ஜெயிலர்' ஆடியோ இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் அவர்கள், அனைவரும் திரையரங்குக்கு வந்து படம் பாருங்கள் என்று பேசியுள்ளார். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் படம் திரையிட ஆவலாக உள்ளனர். அதனால், சூப்பர் ஸ்டார் அவர்கள் தமிழகத்தில் உள்ள எல்லா திரையரங்குகளிலும் ஜெயிலர் படத்தை திரையிட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட உள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com