சர்வதேச திரைப்பட விழா: 3 விருதுகளை வென்ற உதயநிதி ஸ்டாலின் திரைப்படம்!

கண்ணே கலைமானே திரைப்படம்
கண்ணே கலைமானே திரைப்படம்
Published on

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான கண்ணே கலைமானே திரைப்படம் இந்தோ – பிரெஞ்சு பன்னாட்டு திருவிழாவில் 3 விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்துடன் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நாயகனாக நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படம் அதன் கதைக்களத்திற்காக பெரிதும் பாராட்டுகளைப் பெற்றது.

இந்தத் திரைப்படம் தற்போது சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மொத்தம் மூன்று விருதுகளை 'கண்ணே கலைமானே' குவித்து அசத்தியுள்ளது. சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதி ஸ்டாலினும், சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வடிவுக்கரசியும் வென்றுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com