சந்திராயன் - 3 விண்கலம்
சந்திராயன் - 3 விண்கலம்

விண்ணில் பாய்ந்தது சந்திராயன் -3 விண்கலம்!

Published on

ஶ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திராயன் - 3 விண்கலம் பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

கடந்த ஜூலை 22, 2019ஆம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. இதிலிருந்த ஆர்பிட்டர் தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான் – 3இல் இல்லை. மாறாக லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் உந்து கலன் மூலம் புவி வட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பின் உந்து கலனிருந்து லேண்டா் பிரிந்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். ஆகஸ்ட் இறுதியில்தான் நிலவில் அது இறங்கும். தொடர்ந்து லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் 14 நாள்கள் நிலவின் தன்மையையும், சூழலையும் ஆய்வு செய்ய உள்ளன.

சந்திரயான்-3 திட்டத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த விண்கலமானது மொத்தம் 3,895 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷியா, சீனாவை தொடர்ந்து இந்தியா மூன்றாவது முறையாக நிலவை ஆய்வு செய்ய முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com