விஜய் சேதுபதிதான் இனி பிக் பாஸ்... அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

big boss tamil vijay sethupathi
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனி விஜய் சேதுபதி
Published on

விஜய் டிவியின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல் விலகுவதாக அறிவித்திருந்தார். அவருக்குப் பதிலாக யார் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்குவார்கள் என பரவலாகக் கேள்விகள் எழுந்தன. 

இன்னார் தொகுத்து வழங்குவார் என ஆளுக்கு ஒரு பக்கம் ஆரூடம்போல சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இதில், விஜய் சேதுபதியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. 

இடையில், அவரின் மகாராஜா படத்துக்கான விளம்பரப்படுத்தலுக்காக விஜய் டிவியின் இரண்டு நிகழ்ச்சிகளில் விஜய்சேதுபதி பங்கேற்றிருந்தார். 

ஆனால் அவரின் தொகுத்துவழங்கல் குறித்து முறையான தகவல் இல்லாமல் இருந்தது. 

இந்தப் பின்னணியில் அதிகாரபூர்வமாகவே விஜய்சேதுபதிதான் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என அந்தத் தொலைக்காட்சியின் சார்பில் இன்று மாலையில் காணொலி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com