திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்!

புதிய லுக்கில் நடிகர் தனுஷ்
புதிய லுக்கில் நடிகர் தனுஷ்
Published on

நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்துள்ளனர்.

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

இந்த நிலையில் இன்று அதிகாலை தனுஷ் தனது குடும்பத்தோடு திருப்பதி ஏழுமலையான் தரிசித்து உள்ளார். அப்போது தனுஷ் மற்றும் அவரது மகன்கள் மொட்டை அடித்த தோற்றத்தோடு இருந்தனர். தனுஷ் மொட்டை அடித்து இருப்பது தனது 50வது படத்திற்கான புதிய தோற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இணையத்தில் தனுஷின் புதிய லுக் வைரலாகி வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com