சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் மூன்று சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டி பிரிவில் பங்கேற்றுள்ளது.
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் ’கண்ணே கலைமானே’. இந்தப் படத்துக்கு விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமரிசங்களைப் பெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்திய – பிரெஞ்சு திரைப்பட விழாவில் ’கண்ணே கலைமானே’ படம் திரையிடப்பட்டது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வடிவுக்கரசியும், சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதி ஸ்டாலினும் பெற்றனர்.
இந்த நிலையில், அக்கோலேட் சர்வதேசத் திரைப்படப் போட்டி (Accolade Global Film Competition), ஜெய்ப்பூர் சர்வதேசத் திரைப்பட விழா (Jaipur International Film Festival), தொழிலாளர் ஒற்றுமை திரைப்பட விழா (Workers Unite Film Festival) ஆகிய திரைப்பட விழாக்களில், ’கண்ணே கலைமானே’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டிப் பிரிவில் பங்கு பெற்றுள்ளது.
இந்தத் தகவலை இயக்குநர் சீனு ராமசாமி தன் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.