இந்தியன் 2: நீளத்தை குறைத்திருக்கலாம்...கமலின் ஜோடி!

கமல்ஹாசன் - அம்பிகா
கமல்ஹாசன் - அம்பிகா
Published on

‘இந்தியன் 2 படத்தின் நீளத்தை 15 நிமிடங்கள் குறைத்தால் நன்றாக இருக்குமென’ நடிகை அம்பிகா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஜூலை 12ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளாலும் படத்தின் நீளம் அதிகம் என்றும் பார்வையாளர்கள் கூறி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, படத்தின் நீளம் தொடர்பாக எழுந்த விமர்சனத்தை தொடர்ந்து, 11.51 நிமிடக் காட்சிகளை நீக்கியது படக்குழு.

இந்நிலையில், காக்கிச்சட்டை, காதல், சகலகலா வல்லவன் பரிசு உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த அம்பிகா இந்தியன் 2 பார்த்த அனுபவத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “இந்தியன் 2 பார்த்தேன். எனக்கு பிடித்தது. படத்தின் நீளம் 15 நிமிடங்கள் குறைத்தால் நன்றாக இருக்குமென தோன்றுகிறது அவ்வளவுதான். கடின உழைப்பு, நடிப்பு, அதிகமான பணம்.. தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே 12 நிமிடங்கள் குறைத்துள்ள நிலையில் மீண்டும் 15 நிமிடங்கள் குறைப்பதா என ரசிகர்கள் கமெண்டுகளில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

61 வயதாகும் நடிகை அம்பிகா தற்போது சீரியல்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com