மலையாளப்படங்கள் தமிழில் ரீமேக் ஆனால் வௌங்காது என்கிற ட்ரெண்டை சுமாராக உடைத்திருக்கிறது 36வயதினிலே. நாம் அனுதினமும் தொலைக்காட்சிப்பெட்டியில் பார்க்கின்ற அதே கதைதான். பேமிலியின் கொடுமைக்கு ஆளான ஒரு பெண், தொழிலதிபர் ஆகிற கதைதான். என்ன ஜோதிகா நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பெரிய திரையில் ஒரு சின்ன சீரியல் என்கிற அளவில் இது பேரிளம் பெண்களை மிகவும் கவர்ந்துள்ளது! ஆனால் படம் பேசுகிற பெண்ணியமெல்லாம் அந்தகாலத்தில் வி.சேகர், விசுவே நிறைய பேசியவைதான். அதாவது வீட்டைவிட்டு வெளியேறாத, கட்டுப்பாடுகளைக் கடக்காத, கலாச்சாரத்தை இழக்காத, கணவனின் அன்பை துறக்காத பெண்ணியம்! மலையாளத்தில் இப்படம் ஹிட்டடிக்க காரணமாக இருந்தது அந்த நேரத்து மஞ்சுவாரியாரின் ரியல் லைஃப் ட்ராஜிடிகள். இங்கே அதனால்தான் படம் சுமாரான வெற்றியை பெற்றுள்ளது.
தமிழ்சினிமா கலைஞர்களுக்கு அவார்ட் கொடுக்கும் புண்ணியவான்கள் அடுத்த ஆண்டிலிருந்து புதிதாக ஒரு கேட்டகிரி சேர்க்கலாம். ‘’பெஸ்ட் பேய் அவார்ட்”. இவ்விருது தமிழ்சினிமாவின் வளர்ச்சிக்கு மிகமுக்கிய பங்காற்றக்கூடியதாக இருக்கும். கடந்த ஆண்டிலிருந்து இப்போது வரைக்கும் அவ்வளவு பெஸ்ட் பேய்ப்படங்களும் பேய்களும் வந்திருக்கின்றன. அவ்வகையில் சென்ற மாதம் வெளியானதில் சிறந்த பேய் காஞ்சனா, இந்த மாத சூப்பர் - டிமான்டி காலனி!
அருள்நிதி நல்ல படங்களாக, அற்புதமான இயக்குநர்களாக தொடர்ந்து நடித்தாலும் இன்னமும் கடைநிலை நாயகனாகவே கரையோரம் நிற்கவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. டிமான்டிகாலனி ஜாலியாக பயமுறுத்தும் நல்ல பேய்ப்படம்தான். மேக்கிங், சவுண்ட் எபெக்ட்கள் கூட அருமைதான். ஆனால் அருள்நிதி மட்டும் இன்னமும் நடிப்பில் கிண்டர்கார்டன் லெவலிலேயே இருக்கிறார் (உதயநிதி ஸ்டாலினுக்கு பரவாயில்லை). இதற்கு அவருடைய ஜாதக கோளாறுதான் காரணமாக இருக்க வேண்டும். படம் ஒரளவு நன்றாகவே இருந்தும் ரசிகர்கள் மத்தியில் எடுபடாமல் போனதற்கும் அதுவே காரணமாக இருந்திருக்கலாம்.
நடிகர் கமலஹாசன் மீது அனேக புகார்களை வைக்கலாம். ஆனாலும் அடிப்படையில் அவர் மிகச்சிறந்த நடிகர். தமிழில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அவருக்கு இணையான நடிகர் யாருமே கிடையாது. உத்தம வில்லன் அதைதான் நமக்கு உறுதிப்படுத்துகிறது. சின்ன சின்ன முகபாவனைகளில் கோடி அர்த்தங்களை கொட்டிவிடுகிற அபாரமான நடிப்பினை இப்படத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில்தான் ஏனோ தெய்யமெல்லாம் ஆடி ஷூத்தத் தமிழ் பேஷி படம் பார்க்க வந்தவர்கள் மேல் கொலைமுயற்சிகள் செய்து ‘’ஏன்யா ஏன்? நல்லாதான போய்கிட்டிருந்துது” என்று வைகைப்புயல் வடிவேலு போல கதறவைத்தார்.
நான், சலீம் என தன்னுடைய உடலுக்கும் நடிப்பாற்றலுக்கும் என்ன வருமோ அதற்கேற்றபடி அதிக அசைவுகளின்றி முகத்தில் வெவ்வேறு பாவனைகள் காட்ட தேவையற்ற பாத்திரங்களில் நடித்து பேர்வாங்கியவர் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி. அந்த மனிதர் ஏன் இந்தியா பாகிஸ்தான் என்கிற மொக்கையான காமெடி படத்தில் நடித்தார் என்பது புரியாத புதிர்தான்! ஆசை யாரை விட்டது! அவருக்கு காமெடியும் வராமல் காதலும் வராமல் கண்ணீரும் வராமல் தியேட்டருக்கு வந்தவர்களை வருவீயா வருவீயா என்று அடித்து விரட்டினார்! இந்தப்படத்திற்கு சம்பந்தமேயில்லாமல் ஏன் இந்தியா பாகிஸ்தான் என பெயர்வைத்தார்கள் என்றும் புரியவில்லை.
வை ராஜா வை என்றொரு படம். 21 என்கிற ஹாலிவுட் படத்தின் காப்பி இது. நிறைய செலவழித்து ஸ்டைலிஷாக எடுக்கப்பட்ட மொக்கைப்படம். அதில் தனுஷ் நடித்த காட்சிகள் மட்டும் அருமை என்று இணையத்தில் எழுதினார்கள். நிஜமாகவே தனுஷ் நான்கு நிமிடம் வருகிற அந்த காட்சிகளை தவிர மற்றதையெல்லாம் பார்த்தால் ரத்தம் கக்கி சாக நேரிடும்.
இயக்குநர்ஜனநாதனின்சமீபத்தியபடமானபுறம்போக்குமரணதண்டனைதொடர்பானமக்களின்பொதுவானகருத்தியல்களுக்குஎதிரானகறாரானவிமர்சனத்தைமுன்வைக்கிறது. ஆனால்முன்பாதியில்கொலைசெய்யநினைக்கிறஒருஇயக்கம்இரண்டாம்பாதியில்மரணதண்டனையைஎதிர்ப்பதுமட்டும்தான் ROFL முரண். படம்முழுக்கபார்வையாளனுக்குதேவையோஇல்லையோஅவ்வப்போதுஎடுக்கப்படுகிறகம்யூனிசபாடமும்கும்முனுஉடையுடுத்திகவர்ச்சிகள்கொப்பளிக்ககுண்டுவைக்கதுடிக்கும்பெண்போராளியும்கடுப்புகள்! ஆனால்இந்தவிஷயத்தைபேசஇங்கேஇவரைவிட்டால்ஆளில்லை! அதனாலேயேஇம்முயற்சிக்குலால்சலாம்.
ஜூன், 2015.