செய்திச்சாரல்

விவசாயியை மெட்ரோவில் ஏற்றாத நிர்வாகம்!

Staff Writer

பெங்களூரு நகரில் ஒரு மெட்ரோ ரயிலில் ஏறவந்தார் அந்த விவசாயி. கையில் ஒரு மூட்டை. சற்று நைந்த ஆடை. டிக்கெட் எடுக்க வரிசையில் நின்றபோது,' நீயெல்லாம் இந்த ரயிலில் பயணிக்கக் கூடாது' என்று விரட்டி விட்டிருக்கிறார் பாதுகாப்பு அலுவலர் ஒருவர். அவருடன் நின்றவர், இதை வீடியோ எடுத்ததுடன்,' பணக்காரங்களுக்கு மட்டும்தான் மெட்ரோவா? அவர் நல்லா ட்ரெஸ் பண்ணலைன்னு எந்த விதி சொல்லுது?' என சண்டை போட்டு, அவரை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்த வீடியோவை அவர் சமூக ஊடகத்தில் பகிர, அது வைரல் ஆனது. அவரைப் பா ரா ட் டி ய து ட ன் மெட்ரோ தரப்புக்கு கண்டனம் வலுத்தது. மக்கள் கண்டிப்புக்கு மெட்ரோ நிர்வாகம் பணிந்து, அந்த அலுவலர் மீது ந ட வ டி க் ø க எடுத்து இருப்பதாக அறிவித்துள்ளது!

என் விவசாயி; என் ரயில்னு ஒரு இயக்கம் ஆரம்பிச் சிடலாமா?

ரயிலில் ஆட்டமா?

பொது இடங்களில் டான்ஸ் ஆடி வீடியோ எடுத்துப் போடுவது சமூக ஊடகங்களில் வழக்கமாகி விட்டது. இது சில சமயம் பெரும் தொந்தரவாகவும் மாறிவிடுகிறது. மும்பை மெட்ரோ ரயிலில் போஜ்பூரி பாட்டு ஒன்று நடனம் ஆடி வீடியோ எடுத்த சமூக வலைத்தள இன்ப்ளுயன்சரான ஒரு பெண்ணுக்கு சிக்கல் வந்துள்ளது. அந்த வீடியோவில் சகபயணிகள் தாங்கள் படம் எடுக்கப்படுவதைத் தவிர்க்க முகத்தை மூடிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இதை அடுத்து இந்த வீடியோவை ரயில்வே போலீஸ் அலுவலகம் சமூக ஊடகத்தில் பகிர்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது!

ஆட்டம் போட்டால்... போலீஸ் வரும்

போலி பொருட்கள்!

அமேசானில் பொருட்களை வாங்குவது இப்போது சாதாரணமாகிவிட்டது. அந்த பொருள் போலியாக இருந்தால்? கப்பார் சிங் என்பவர் தான் வாங்கிய ஐபோன் போலியானது என்று சொல்லி ஒரு செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். மற்றவர்களும் இப்படி ஏமாற்றப்பட்ட தகவல் இருந்தால் பகிருங்கள் எனக்கேட்க, அச்செய்தி பரவலானது. அதன் பிறகு அமேசான் நிறுவனத்தார் உடனே தகவல்களைக் கொடுங்கள்; சரி செய்துவிடுகிறோம் என எக்ஸ் தளத்திலேயே பதில் அளிக்கம் அவரும் விவரங்களைக் கொடுத்திருக்கிறார். அவரைப்போலவே போலி பொருளை வாங்கியவர்கள் அந்த தளத்தில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துவருகிறார்கள்.

எச்சரிக்கையாக இருக்கணுங்க!

விலங்குகளும் மனிதர்களும்!

கடைசியில் அந்த சர்ச்சை ஓர் அதிகாரியின் வேலையில் கைவைத்து விட்டது! மேற்குவங்கத்துக்கு திரிபுராவில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு சிங்கங்களின் பெயர்கள் அக்பர் என்றும் சீதா என்றும் இருந்த சர்ச்சை நமக்குத் தெரியும். இந்த பெயர்களை எதிர்த்து வி.எச்.பி அமைப்பு சார்பாக கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எதுக்கு சர்ச்சை? பெயரை மாத்திட்டுப் போங்களேன் என நீதிமன்றம் கூறிய நிலையில் இந்த சிங்கங்களுக்குப் பெயர் வைத்த திரிபுரா மாநில தலைமை வன அதிகாரி பிரபின் லால் அகர்வால் என்பவரை சஸ்பெண்ட் செய்து உள்ளது அங்குள்ள பாஜக அரசு.

சிங்கங்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை!

குடிச்சிருக்கேன் சார்!

லண்டனில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்துள்ளது. அழைத்தவர் தான் அதிகமாகக் குடித்துள்ளதாகவும் அந்நிலையில் வாகனம் ஓட்டிக்கொண்டு இருப்பதாகவும் கூறி உள்ளார். தான் செய்வது என்னதென்றே தெரியாத நிலையில் இருந்த அவரைத் தேடிச் சென்று பார்த்தால் மூன்று மடங்கு அதிகம் குடித்த நிலையில் வேன் ஓட்டிக் கொண்டு இருந்துள்ளார். அவரைப் பிடித்து தண்டனை வழங்கி உள்ளனர்.

என்ன குடித்தாலும் நிதானம் தவறாமல் காவல்துறைக்குப் போன் செய்த அவரைப் பாராட்டலாமே பிரெண்ட்ஸ்...