புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் சிங்கப்பூரில் மூன்று நாட்கள் இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். அவரது ரசிகர்களாக இருக்கும் பள்ளி மாணவர்கள் சிலர், சிங்கப்பூர் கல்வி அமைச்சரிடம் அந்நாட்களில் பள்ளிக்கு விடுமுறை கேட்டுள்ளனர். அமைச்சரோ கூலாக,
’ அவரை உங்கள் பள்ளிக்கு வந்து இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தச் சொல்லுங்க. லீவு விட்ருவோம்’ என்று சொல்லிவிட்டார்! அடுத்த ஆண்டு நடக்கப்போகும் நிகழ்ச்சிக்கு இப்போதே டிக்கெட் விற்பனையும் ப்ரமோஷனும் தொடங்கிவிட்டது!
அம்மா செத்துவிட்டாள் என்று சொல்லி ஆவணங்களைத் தயாரித்து, சொத்துகளை தங்கள் பெயருக்கு மகளும் மருமகனும் மாற்றிக் கொண்டனர். செத்துப்போனதாக பதிவு செய்யப்பட்ட, எழுபது வயதாகும் சாந்தி தேவி என்கிற அந்த அம்மா, ‘நான் இன்னும் சாகலய்யா’ என்று நிரூபிக்க படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில்தான் இந்த கூத்து. கணவர் இறந்த பிறகு மகள் தன்னை சரியாகக் கவனிக்காதது மட்டுமல்ல; உள்ள சொத்தையும் கிராம அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துப் பிடுங்கிக் கொண்டதாக சொல்லும் இந்த மூதாட்டி, தான் உயிருடன் இருப்பதற்கு ஏதாவது சான்றிதழ் கொடுங்கள் என ஒரு மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் தோன்றி கேட்க ஆடிப்போயிருக்கிறார்கள் உ.பி. அதிகாரிகள்!
அரசியலில் கருத்துக்கணிப்பு என்றாலே கவனமாக இருக்கவேண்டும். மகாராஷ்டிரா வில் சிவசேனா- பாஜக கூட்டணி அரசு நடக்கிறது. சிவசேனாவை பிளவு படுத்தி வெளியே வந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வர். முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வர். சமீபத்தில் சிவசேனாக்காரர்கள் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் ஒரு விளம்பரம் கொடுத்தார்கள். அதில் ஒரு சர்வே முடிவு வெளியிடப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வரும் இப்போதைய துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸை விட ஏக்நாத் ஷிண்டேவைத்தான் மக்கள் விரும்புவதாக போடப்பட்டிருந்தது. பார்த்த எல்லோருக்கும் பாஜக- சிவசேனா கூட்டணி பணால் என்றுதான் தோன்றி பரபரப்பாகிவிட்டது. அடுத்த நாளே சிவசேனா இன்னொரு விளம்பரம் கொடுத்தது. அதில் ஏக்நாத் ஷிண்டே- பட்னாவிஸ் இருவரும் கைகளைத் தூக்கி போஸ் கொடுக்க, அமித் ஷா, பால்தாக்கரே ஆகியோரின் படங்களும் போடப்பட்டு, ஷிண்டே- பட்னாவிஸ் ஆட்சியை பெருமளவு மக்கள் விரும்புவதாக அதே சர்வேயின் இன்னொரு முடிவை வெளியிட்டு, சமாளித்திருக்கிறார்கள்! ஏன் தேவையில்லாத ஆணியைப் பிடுங்கவேண்டும்?அலறவேண்டும்?
இர்ரா மோர்… ஆக்ராவைச் சேர்ந்த ஜாட் குடும்பப் பின்னணி உள்ள நடிகை. அங்கிருந்து புறப்பட்டு வந்து கன்னடா, தெலுங்குப் படங்களில் நடித்து பாலிவுட்டிலும் காலடி எடுத்துவைத்திருக்கிறார். மிகவும் கண்டிப்பான குடும்பம். இருப்பினும் சிறுநகரப் பெண்களின் சாதிக்கும் ஆசையின் பிரதிபலிப்பாக நடிப்பை தன் தொழிலாகத் தேர்வு செய்து முன்னுக்கு வந்திருக்கிறார் இர்ரா மோர். புகைப்படத்தைப் பார்த்தால் தமிழுக்கு எப்போது வருவார் எனத் தோன்றுகிறதா? தோ.. இருடா வந்துட்டேன் என்று காதோடு கிசுகிசுக்