தொடர்கள்

தமிழும் சித்தர்களும்-25

மரு. சிவக்குமார்

குடும்ப வாழ்க்கை குறிஞ்சி நிலத்தில் தான் தொடங்குகிறது, என்ற மன ஓட்டம், மலையில் மழைவிழுந்து அருவியாய்,  நதியாய் கடலோடு கலக்கும் இயல்பு, குறிஞ்சியில் மனிதன் தோன்றினான் என்ற அறிவியல்; தற்போது ஒத்துபோகிறது. குறிஞ்சி நிலத்தின் கடவுளாக குமரன் அதாவது முருகன் உள்ளார். ஆனால் குமரிகண்டம்; நீர் பிரளயத்;தில் மூழ்கிய பொழுது, இலங்கைக்கு இடம் பெயர்ந்தவராக தான் குமரன் அறியப்படுகிறார். முருகனின் எல்லா புனைப்பெயர்களும் வரலாற்று நிகழ்வை தக்க வைக்க பட்டவையாகவே உள்ளது. உதாரணமாக கதிர்வேலன் - முருகன் முதல்; விவசாயி ஆவான், பயிர்; சொல்லான கதிரையும், வேளாளர் என்ற சொல்லை ஈன்ற வேலன் சொல்லை இணைத்து வந்தது. கார்த்திகேயன் - கார்காலம் எனும் மழைகாலம் முடிந்தவுடன் பனங்காட்டுக்கு தீ வைத்து விவசாய நிலத்தை உருவாக்கினதால்;                கார் +  தீ + கையன் இணைந்து வந்தது. முத்துக் குளிப்பதலும் முருகன் முன்னோடியாக இருந்ததால், முத்தெடுத்த குமரன்; முத்துக்குமரன் ஆனது. முருகனின் அனைத்து பெயர்களும் ஒரு தமிழ் வரலாற்றை சொல்லும்.

தமிழ் கடவுள் முருகன் காதலையும், வீரத்தையும், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விதைத்த தமிழ் சித்தன். அத்தனை புனைபெயர்களும் அவன் வாழ்ந்த இடத்தையும், அவன் நமக்கு தந்த மற்றவைகளும்; வரலாற்றை தக்க வைக்க இன்று வரை நம்மை சுற்றி வருகிறது. மனித வரலாற்றில்  முதல் விவசாயி முருகன் தான், அவன் உருவாக்கிய  முதற் பயிர் திணை, குறிஞ்சி நில பயிர். அதனால் தான் விவசாயத்;தின் வெற்றி விழாவான கார்த்திகை தீபம் அன்று திணையால் செய்யப்பட்ட மாவிளக்கு முருகனுக்கு படையல் செய்யப்படுகிறது. பெரும்பாலான முருகன் கோவில்களில் திணை மாவுடன் இனிப்பு சேர்த்து பிரசாதமாக தரப்படுகிறது. முருகன் பயிரிட்ட இரண்டாவது பயிர் சர்க்கரைவள்ளி கிழங்கு. இந்த பெயர், விவசாய தெய்வமான வள்ளியின் பெயராலயே சூட்டப்பட்டது. விவசாய தெய்வமான பச்சையம்மனுக்கான கோள் வெள்ளி. வெள்ளியே மருவி வள்ளி என்றானது. இன்றும் நியூசிலாந்தில் சர்க்கரைவள்ளி கிழங்கை குமரா என்று  முருகனின் பெயரால் அழைக்கப்படுவதால், முருகனே விவசாய தொழில் நுட்பத்தை கண்டறிந்தவர் என்றாகிறது. கதிர்காமம் முருகன் கோவிலில் இருந்து முந்நூறு மீட்டர் தொலைவில் அல்-கதிர் என்ற மசூதி உள்ளது. இது முருகனுக்கு இஸ்லாமுடன் உள்ள தொடப்பையும்; குறிக்கிறது.

உலகில்; பல மலைகள் அல்லது குன்றுகள் குமரனின் பெயரில் அழைக்கப்படுவது, ஆசிவக சித்தர்கள், தமிழ் சித்தனாகிய முருகனின் வழி வந்தவர்களாகவே அமைகிறது. உஸ்பெக்கிஸ்தானில் சமர்கண்ட் என்ற இடத்தில்    அல்-கதிர் மசூதி உள்ளது. சமர்கண்ட் என்ற இடத்தின் பெயர்; எதை குறிக்கிறது?      சமர் என்றால் சண்;டை என்று பொருள், முருகன் ஓர் போர் கடவுள், கண்ட் - கந்து என்றாகி கந்தன் என்றாகும். இதை போலவே உலகின் பல பகுதியில்  அல்-கதிர் மசூதி உள்ளது. இவற்றிலிருந்து இஸ்லாமியர்களின் அல்-கதிர் என்பது  பச்சை மனிதன் எனறே கூறுகிறார்கள்.

அல்-கதிர் என்பவர்; ஓர் விவசாயியே ஆகிறார்.  கதிர்வேலன் நீர்பிரளயத்திற்கு பிறகு அதாவது 10000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் தோன்றி தமிழ் சமூகத்தில் பெரும்; மாற்றங்களை கொண்டு வந்தார். அவை, சித்தர்கள் ஆதிகால விஞ்ஞானிகள், மக்கள் தங்களின் நலன்களுக்காக இந்த சித்தர்களைச் சார்ந்து வாழ்ந்தனர். அந்த வாழ்க்கையை முருகன் ஆசிவகம் என்ற பெயரால் வகைப்படுத்தினார். ஆசிவகத்தின்; சின்னங்களாக யானையையும், தாமரையையும் அவற்றின் தன்மைகளை கொண்டு முன்மொழிந்தார். விவசாய தொழில் நுட்பத்தை செயல்படுத்திய அதே வேகத்தில் போர் கலைகளையும் கண்டறிந்தார். விவசாயிகளான தனது மக்களையும் கடும் உழைப்பில் அவர்கள் கொண்ட செல்வத்தையும், கொள்ளைக் கூட்டத்திடமிருந்து காக்கவே அவர் போர் கலைகளை வளர்த்தெடுத்தார். அதனாலேயே அவர் போர்க்கடவுளாகவும் அறியப்பட்டார். விவசாயத்;திற்கு மிக அவசியமான சூரியமான நாட்காட்டியையும் உலகில் முதன் முதலாக வெளியிட்டார். அதற்கு முன்பு சிவன் காலத்திலிருந்தே சந்திரமான நாட்காட்டியே புழக்கத்தில் இருந்தது. இன்றைய வானியல் அறிவு, முதல் சித்தனாகிய, மரணமில்லா பெருவாழ்வு கொண்ட, 20000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சிவனின் அடிப்படை கண்டுபிடிப்பு. ஒன்று மட்டும் புரிகிறது, உலகில் எங்கு நோக்கினும் தமிழும், தமிழர் கடவுளாகவே உள்ளது மற்றும் அதன் குறியீடுகள் மற்ற மதங்களிலும் பின்னி பிணைந்துள்ளது.

இந்த மரபை காத்து, மரபுவழி கொண்டாட்டத்தை காத்து, நம் வரலாற்றை நாம் தக்க வைக்க வேண்டும். கலிகால சித்தனாகிய கண்ணதாசன் விட்டு சென்ற மரபு வழிசெய்தி, அர்த்தமுள்ள இந்து மதமாக வந்தாலும், அதில் தமிழ் மணமே வீசுகிறது. தன்னலம் கருதாது, தமிழால் தரணிக்கெல்லாம் தொண்டு செய்து, உன் அருளுக்கு வழி தெரியாமல் அலைகிறேன். ஐயா, அலையும் என் உள்ளத்திற்கு நீ ஆறுதுல் கூறும் நன்னாள் என்னாளோ, அறியேன் அப்பா இது அவ்வையின் வாக்கு. வயதில் இளமையும், வாக்கில் முதுமையும், முத்தமிழ் இரத்தத்தில் ஓடும் தன்மை கொண்டவன் சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்ற கேள்வி, முருகா, இந்த அவ்வையின் வரிகளில் நீ மாடு மேய்க்கும் சிறுவனே அல்ல, முத்தமிழுக்கும் தெய்வம் நீ, என் தமிழ் மீது ஆணை முருகா முருகா இதோ கண்ணதாசன் வரிகளில் அவ்வையின் அரியது, கொடியது, பெரியது, இனியது 

          இனிது இனிது ஏகாந்தம் இனிது

          அதனினும் இனிது ஆதியை தொழுதல் 

          அதனினும் இனிது அறிவினில் சேர்தல் 

          அதனினும் இனிது அறிவுள்ளோரை 

          கனவிலும் நனவிலும் காண்பது தானே.....

முருகன்  :  புதியது என்ன?

          என்றும் புதியது பாடலென்றும் புதியது 

          பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது - முருகா 

          உனைப்பாடும் பொருள் நிறைந்த பாடலென்னும் புதியது 

......... 

முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது 

முறுவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது 

உன்னை பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது 

உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது  

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது 

சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது 

அறிவில் அரியது, அருளில் பெரியது   

அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது 

முதலில் முடிவது, முடிவில் முதலது 

மூன்று காலம் உணர்ந்தபேருக்கு ஆறுமுகம் புதியது

-    கந்தன் கருணை 

உன்னை பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது. முருகனே, வேலனே தன் வயிற்றில் பிறக்க வேண்டும் என்று வேண்டும் எத்தனையோ தாய்மார்கள் உண்டென்ற தமிழ் பூமி இது. அப்படியே பெண்ணாக பிறந்தாலும், அம்பாளே மகளாக பிறந்தாளே என்று எண்ணம் கொண்டு வாழும் தமிழுலகம் இதுவே, இன்று ஆணென்று, பெண்ணென்று கருவிலே அறிவது, சட்டப்படி குற்றம் என்றானது. இதையும் மீறி ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளவே, இங்கே எத்தனை இன்னல்கள். எனக்கு தெரிந்து ஓர் ஆணொன்று பிறக்க எத்தனை கருக்கலைப்பு. கருகலைத்தவர்களும் இப்பூமியில் ஓர் நாள் இல்லாது போனார்கள், பிறந்த ஆணும் வாரிசு இல்லாது போனான். 

          பழனிமலை மீதிலே குழந்தை வடிவாகவே

          படைவீடு கொண்ட முருகா 

          பால் பழம் தேனோடு பஞ்சாமிர்தம் தந்து 

          பக்தரை காக்கும் முருகா

          ஜெயமுண்டு, பயமிலலை வேல் வேல் 

          சக்தி வடிவுண்டு மயிலுண்டு கொடியுண்டு 

           வேல் வேல்                - துணைவன்