தொடர்கள்

சிற்றிதழ் அறிமுகம் -55

மு. யாழினிவசந்தி

ஜனரஞ்சகமாக வெளிவந்து கொண்டிருக்கும் மாத இதழ் 'செம்மலர்' . இவ்விதழ் 1970 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 36 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருப்பது ஒரு சாதனை என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் கு.சின்னப்பாரதி ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் இடையில் கே.முத்தையா நீண்டகாலம் ஆசிரியராகவும் தற்போது எஸ்.ஏ.பெருமாள் ஆசிரியராகவும் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் செம்மலர் ஆரம்பத்திலிருந்தே மாத இதழாக வந்துகொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் சிறிய வடிவில் 80 பக்க அளவில் வெளிவந்த இவ்விதழ் டிசம்பர் 2005லிருந்து பெரிய வடிவில் 40 பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது.ஆரம்பகாலத்தில் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகப்படியான சிறுகதைகளை வெளியிட்டு வந்தது. பின்னர் நூல் மதிப்புரை , கவிதைகள் , மொழிபெயர்ப்புக் கதைகள் , நேர்காணல்கள் , தமிழ்ப் பழமொழிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சிறுகதைகளில் இருந்து சிறந்த கதைகளைத் தேர்வு செய்து 'சிகரசிறுகதைகள்' எனப் பாராட்டி வெளியிட்டு சன்மானமும் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மனித நேயத்துடன் கூடிய முற்போக்கு இலக்கியங்களை வெளியிடுவது , நல்ல படைப்பாளிகளை ஊக்குவிப்பது ஆரோக்கியமான சமூகச்சூழலை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறது 'செம்மலர்' . இன்று இலக்கிய வட்டாரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மேலாண்மை பொன்னுச்சாமி போன்ற பல முக்கிய எழுத்தாளர்கள் செம்மலரால் அறியப்பட்ட பெருமைக்குரியவர்கள்.

அருணன் , செந்தி , பேரா.பெ.விஜயகுமார், எஸ்.ஏ.பெருமாள் ,எஸ்.இலட்சுமணப்பெருமாள் , மணிபாரதி , தே.இலட்சுமணன் , இரகுமா போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியாகிவருகின்றன.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மார்ச் 2006 இதழில் வெளியான ' பெண் - தொடரும் போர்' எனும் கட்டுரை பெண் விடுதலை குறித்து பேசும் முக்கியமான கட்டுரையாகும். இதே போன்று பல்வேறு சிற்இதழ்களையும் செம்மலர் வெளியிட்டிருக்கிறது.

பொங்கல் மலர், தமிழ்ப்புத்தாண்டு சிறப்பிதழ் , மாவட்டச் சிறப்பிதழ் , கண்ணதாசன் சிறப்பிதழ் , கல்கி சிறப்பிதழ் , புதுமைப்பித்தன் சிறப்பிதழ் போன்றவை குறிப்பிடத்தìகவையாகும்.

" வேலூர் சிப்பாய் புரட்சி 100 வது ஆண்டு விழாவையொட்டி 'வேலூர் சிப்பாய் புரட்சி சிறப்பிதழ் ' வெளியிட்டது செம்மலர். அதற்குப் பிறகு தான் அரசு , 'வேலூர் சிப்பாய் புரட்சி தினம்' ஏற்படுத்தியது. " என்கிறார், ஆசிரியர் பெருமிதத்துடன்.

2004 ஆம் ஆண்டில் வெளிவந்த இதழ்களில் ' அறிமுகம்' எனும் பகுதியில் வெளிநாட்டு எழுத்தாளர்கள் குறித்து கட்டுரையும் ,'உள்ளம் கவர்ந்த உலகத் திரைப்படங்கள் ' பகுதியில் உலகத் திரைப்படங்கள் குறித்து வரலாறும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

செமம்லர் இதழ் தொடர்பாக அவ்வப்போது 'செம்மலர் வாசகர் வட்டம்' கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆசிரியர் பற்றி...

62 வயதாகும் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் 18 வருடம் மாவட்ட செயலாளராகவும் (District Secretary) போக்குவரத்து தொழிற்சங்கத்தில் 20 வருடமும் பணியாற்È¢யவர். இதழ் பணியுடன் நுல்களும் வெளியிட்டிருக்கிறார். மொழிபெயர்ப்பு கவிதைகள் , தத்துவார்த்த கட்டுரைகள் தொகுப்பு , மொழிபெயர்ப்பு சிறு க்கள் என இதுவரை 17 நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.

அக்டோபர் 13, 2006