திரைப்படப் பாடலில் உரிமை யாருக்கென்ற விவாதம் தமிழ் சினிமா வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய ஒரு கேள்வி. இந்த கேள்விக்கு இசையமைப்பாளரும் பாடகருமான ரமேஷ் விநாயகம் அந்திமழைக்கு அளித்த நேர்காணலில் சில உதாரணங்களுடன் விளக்கினார். அதன் சிறு பகுதி உங்களுக்காக:
இளையராஜா தான் அமைத்த மெட்டை குறிப்பிட்ட படத்துக்குத்தான் தருகிறார். அதனால், பாடலுக்கான உரிமை அவருக்கு உண்டு. அதேபோல், பாடலை எழுதிய கவிஞருக்கும், அதற்கு பணம் கொடுத்த தயாரிப்பாளருக்கும் உரிமை உண்டு. சினிமா பாடலில் அறிவு சார் சொத்துரிமை என்பது இவர்கள் மூவருக்கும்தான். பாடகருக்குக் கூட கிடையாது. ஆனால், உரிமை உள்ளது என்கிறார்கள். அதை எப்படி கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை.
ஒரு பாடலை வெளிக்கொணர்வதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகளில் முக்கியமானவர்கள் பாடகர்கள். அது யாராக இருந்தாலும்.
பாடல் காப்புரிமை விவகாரத்தில் இளையராஜாவை நிறையப் பேர் திட்டுகிறார்கள். அவரிடம் பணம் இல்லையா என்று. ஒரு உதாரணம் சொல்கிறேன், ‘இளைய நிலா’ பாடலுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கும், பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கும் தயாரிப்பாளர் பணம் கொடுத்தார் தானே?. அப்படி இருக்கும் பட்சத்தில், இந்த பாடலை மேடையில் பாடுவதற்கு எஸ்.பி.பி. ஏன் பணம் வாங்க வேண்டும்?
இளையராஜா பணம் வாங்கிவிட்டார். அதனால், அவர் மீண்டும் பணம் கேட்கக் கூடாது என்றால், எஸ்.பி.பி. யும் பணம் வாங்கக் கூடாது என்றுதானே சொல்ல வேண்டும். அப்படி சொல்ல முடியுமா? முடியாதுதானே.
மேடையில் பாடுவதற்காகவா பாடலின் உரிமை கொடுக்கப்படுகிறது? எந்த தளத்துக்கு உரிமை கொடுக்கிறார்கள் என்பது முக்கியம். பாடலை கம்போஸ் பண்ணி ஒரு படத்துக்குக் கொடுத்திருக்கிறேன், ரோடியோவுக்கோ மற்ற தளங்களுக்கோ கொடுக்கப்படுவதில்லை. அறிவு சொத்துரிமை படி என் டியூன் எனக்குத்தான் சொந்தம்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராமானுஜர் படத்தின் என்னுடைய இசைகோர்ப்பின் நோட்டேசன் சிஸ்டத்தை வெளியிட்டிருந்தார்கள். அதற்கு என் அனுமதியைக் கேட்டுத்தான் வெளியிட்டிருந்தார்கள்.” என்கிறார் ரமேஷ் விநாயகம்.
நேர்காணல் சுட்டி கீழே: