கொரோனா சமயத்தில் டாஸ்மாக் கடைகள் இன்னும் சென்னையில் திறக்கப்படவில்லை. இருப்பினும் சென்னைக்கு வெளியே திறக்கப்பட்டு விற்பனை குறைவில்லாமல் நடக்கிறது. விஸ்கி ரம் என்று மதுப்பிரியர்கள் சந்தோஷப்படுகிறார்கள். கடந்த ஆண்டு உலகிலேயே அதிகமாக விற்பனை ஆன விஸ்கி எது தெரியுமா? நம் இந்திய மதுப்பிரியர்கள் குடித்துத் தீர்த்த பிராண்ட் தான். மெக்டவல்ஸ் நம்பர் ஒன் விஸ்கிதான் உலகிலேயே அதிகம் விற்ற பிராண்ட்.
இதற்கு அடுத்த இடத்தைப் பிடித்ததும் இன்னொரு இந்திய விஸ்கி பிராண்ட்தான்.. அது.. ஆபீஸர்ஸ் சாய்ஸ்! உலகில் அதிகம் விற்பனையாகும் விஸ்கி பிராண்ட்களில் முதல் பத்தை எடுத்துக்கொண்டால் அதில் ஏழு இந்திய பிராண்ட் விஸ்கியாகத்தான் உள்ளது. மில்லியனர்ஸ் கிளப் 2020 அறிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஆகவே, மதுப் பிரியர்களே உங்கள் பிராண்ட் மது எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பற்றி எப்போதாவது யோசித்தது உண்டா?
ஆகஸ்ட், 2020.