நாட்டில் மே மாதம் முதல்வாரத்தில் இருந்து கொரோனா தொற்று குறையத் தொடங்கும் என்று ஏப்ரல் மாதம் சு4 ஆம் தேதி நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், கூறினார். அவர் அப்போது எப்படி தொற்று குறைந்து பூஜ்யம் என்ற நிலைக்கு மே மாதம் நடுவில் வரும் என்ற வரைபடம் ஒன்றையும் வெளியிட்டார். பொது ஊரடங்கால் இந்தியாவில் கொரோனா தொற்று எப்படி தடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்ட அவர் அந்த வரைபடத்தை உருவாக்கினார். ஆனால் நடந்ததோ வேறு. பல கொரோனா காமெடிகளில் இந்த வரைபடமும் முதலிடத்தைப் பிடித்துவிட்டது. அந்த வரைபடத்தின் படி மே பு6 ஆம் தேதி இந்திய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை பூஜ்யமாக இருக்கவேண்டும்! ஆனால் மாறாக தொற்று எண்ணிக்கை எகிறி ஒரு லட்சத்தையும் தாண்டி விட்டது.
இந்த வரைபடத்தை வைத்து அவரை சமூக ஊடகங்களில் வறுத்து எடுத்துவிட்டார்கள். இதை யடுத்து மத்திய அரசு இந்த வரைபடம் உருவாக்கிய தவறான எண்ண ஓட்டத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும் நிலை உருவாகிவிட்டது. மே சுசு ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில், நான் சொல்ல வந்தது அது அல்ல. தவறான கருத்தாக்கம் உருவானதற்காக மன்னிப்புக் கோருகிறேன் என்று வி.கே.பால் சொன்னார். இவர் கொரோனோ நோய்த்தொற்றை சமாளிக்க மத்திய அரசு உருவாக்கிய பதினோரு குழுக்களில் ஒன்றின் தலைவர். அவர் இப்படி மன்னிப்புக் கேட்டு சமாளித்த அன்று நாட்டில் கொரோனோ தொற்றாளிகள் எண்ணிக்கை பு,பு8,447! கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதமாதிரி, “பெரும்பாலான நோய்த்தொற்று பு0 மாநிலங்களில் மட்டுமே அதுவும் இதில் அறுபது சதவீதம் ஐந்து நகரங்களில் மட்டுமே உள்ளது” என்றார். பாவம் அவரும் என்னதான் பண்ணுவார்! இந்த கொரோனா வைரசும் அரசு சொல்வதைக் கேட்பதில்லை! மக்களும் சொன்னபடி கேட்டு நடப்பதில்லை!
ஜூன், 2020.